கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!

சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்தியாவே முக்கியமான அணி என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். 

Michael Clarke hardik pandya

துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அணியில் இந்த முறை பும்ரா போன்ற முக்கிய பந்துவீச்சாளர் இல்லை என்பது ஒரு கவலையான விஷயமாக உள்ளது.

எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ரா இல்லை என்றாலும் அணி தரமாக இருக்கிறது…எனவும், இந்த வீரர் சிறப்பாக செயல்பட போகிறார் எனவும் பேசி வருகிறார்கள். அந்த வகையில்,  முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய அணியின் முக்கிய வீரரை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது ” இந்திய அணி கோடை கால தொடர்களில் விளையாடியபோது அவர்கள் தவறவிட்டவர் ஹர்திக் பாண்ட்யா தான். அவர் இருந்திருந்தால் நிச்சியமாக அந்த சமயம் அணிக்கு இன்னும் பக்க பலமாக இருந்திருக்கும்.

குறுகிய காலத்தில் கிரிக்கெட்டில் நுழைந்தவுடன் அவர் ஒரு முக்கிய வீரராக வளர்ந்து நிற்கிறார் என்றால் இதற்கு அவருடைய விளையாட்டு மட்டும் தான் முக்கியமான காரணம். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். சின்ன போட்டிகளில் மட்டுமின்றி பெரிய போட்டிகளில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர் தான். எனவே, இந்திய அணியை மிகவும் வலுவானதாக பார்க்கிறேன். அவர்கள் என் முதல் நான்கு அணிகளில் ஒன்றாக இருக்கிறார்கள்.

இதன் காரணமாக நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட போகிறார் என நான் நினைக்கிறேன். இந்த போட்டியை தனக்கு சத்தமாக பயன்படுத்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறார்” எனவும் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மைக்கல் கிளார்க் “பும்ரா குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாதது ஒரு பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியை இப்படி பார்க்கும்போது வலிமை இல்லை என்று சொல்லவே முடியாது. பும்ரா இல்லை என்றாலும் கூட இந்திய அணி வலிமையாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால், ப்மன் கில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டக்காரர். அதனால் அவரும் மீண்டும் நல்ல ஃபார்மில் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்தியாவே முக்கியமான அணி என்று நான் இன்னும் நினைக்கிறேன்” எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்