நேரமே சரியில்ல பாஸ்…மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் 1வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 27 பந்துகளில் 10 ரன்களில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கம்பேக் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10 என ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விளாசி மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அரை சதம் விலகிய போட்டியை தவிர்த்து மீதமுள்ள போட்டியில் குறைவான ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
அவருடைய பழைய பேட்டிங் பார்மை ஒப்பிட்டு பார்க்கும்போது அவர் இப்படி பார்மில் இருப்பது ஏமாற்றமாக தான் இருக்கிறது. இந்தியா தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ரோஹித் சிறப்பாக விளையாடுவார் என என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2-வது போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது அவர் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் தோல்வி அடைத்து பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் 3-வது போட்டியில் இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்கள் எடுத்து பெவிலியனுக்கு தலையை தொங்கபோட்டுக்கொண்டே சென்றார்.
இதனையடுத்து, பேட்டிங்கில் சொதப்பிய ரோஹித் சர்மாவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். மேலும், சிலர் ரோஹித் சர்மாவுக்கு நம்பர் 6 இடம் சரியாக வில்லை அவரை வழக்கம்போல ஓப்பனிங் இறக்க வேண்டும். ஒரு வீரர் ஓப்பனிங் ஆடிவிட்டு நம்பர் 6-இல் இறங்கி எப்படி விளையாடமுடியும் உடனடியாக அடுத்த போட்டியில் அவரை ஓப்பனிங் இறக்கிவிட முடிவு செய்யுங்கள் என அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கெளதம் கம்பீரிடம் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.