“ஈ சாலா இந்த வருடமும் கப் நமதே” கோலாலமாக தொடங்கும் மகளிர் ஐபிஎல் திருவிழா…
இன்று முதல் பெண்கள் ஐபிஎல் தொடரின் 3வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூருவை குஜராத் அணி எதிர்கொள்கிறது.

பெங்களூரு : ஆண்கள் கிரிக்கெட் அணிகள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருவது போல, கடந்த 2 ஆண்டுகளாக அதற்கு முன்னதாக மகளிர் ஐபிஎல் (WPL) போட்டிகள் நடைபெற்று வருகினறன. இதில் ஆண்கள் அணியில் உள்ள சில அணிகளில் பிரான்சிஸ் அதே பெயரில் பெண்கள் அணிகளாகவும் உள்ளன.
அணி விவரங்கள்…
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), மும்பை இந்தியன்ஸ் (MI), டெல்லி கேபிட்டல்ஸ் (DC), உ.பி வாரியர்ஸ், குஜராத் கெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக உள்ளார். ஹர்மன் ப்ரீத் கவுர் மும்பை அணிக்கும், ஆஷீக் கார்ன்ட்ர் (ஆஸ்திரேலியா) குஜராத் அணிக்கும், மெக் லானிங் (ஆஸ்திரேலியா) டெல்லி அணிக்கும் , தீப்தி சர்மா உ.பி அணிக்கும் கேப்டன்களாக உள்ளனர்.
சாம்பியன் RCB :
2023ஆம் ஆண்டு தொடங்கிய இத மகளிர் ஐபிஎல்-ல் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆண்டு 2024-ல் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஆண்கள் ஐபிஎல்-ல் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணிகளில் ஒன்றான RCB அணிக்கு ‘கப்’ என்பது கனவாகவே உள்ளது. பெண்கள் ஐபிஎல்-ன் 2வது சீசனிலேயே RCB அணி வென்று கப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
எப்போது எங்கு?
இந்தாண்டு போட்டிகள் இன்று (பிப்ரவரி 14) முதல் தொடங்கி மார்ச் 11 வரையில் 20 லீக் போட்டிகளை கொண்டுள்ளது. மார்ச் 13 பிளே ஆப் போட்டியும், மார்ச் 15இல் மும்பை பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனலிலும் நேரடி ஒளிபரப்பாக பார்க்கலாம்.
முதல் போட்டியானது குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணிக்கும் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.