SAvsAUS: ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாயை எதிர் கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். குயின்டன் மட்டுமே 3 ரன்கள் மட்டுமே எடுக்க, டெம்பா பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம் இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருந்தும் சில நிமிடங்களிலேயே இருவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை இழந்தார்கள். இதன்பிறகு, ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் விளையாடினார்கள். இருவரும் தலா 10 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், மழைக் குறுக்கிட்டள்ளதால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் ஆரம்பிக்க, சிறப்பாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட் வீசிய பந்தில் தனது அரைசதத்தைத் தவறவிட்டு, 47 ரன்களில் போல்ட் ஆனார். அவரைத்தொடர்ந்து மார்கோ ஜான்சன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் டேவிட் மில்லர் திறம்பட செயல்பட்டு சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.
இவருடன் இணைந்து ஜெரால்ட் கோட்ஸி விளையாடினார். ஆனால் 19 ரன்களில் ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் 80 ரன்களைக் கடந்தார். தொடர்ந்து கேசவ் மகாராஜ் களமிறங்கி 4 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லர் சதம் அடித்து அசத்தினார். பின் 101 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில், டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் ககிசோ ரபாடா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தப்ரைஸ் ஷம்சி மட்டுமே களத்தில் இருந்தார்.
முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களும், டிராவிஸ் ஹெட் 47 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இருவரும் தலா3 விக்கெட்டுகளும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்க உள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…