தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை தொடக்கம்!

South Africa vs India

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை தொடர்ந்து, உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இந்திய தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில், ரோஹித், கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கியது.

சிறப்பாக செயல்பட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய லோகோ வெளியீடு…!

இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளது. இதில், டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடரும் நிலையில், துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஜடேஜா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையேயான டி20 தொடர் நாளை டிச.10 தொடங்குகிறது.

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் நாளை முதல் டி20 போட்டியிலும், டிச.12ல் 2வது டி20 போட்டியிலும் மற்றும் டிச.14ஆம் தேதி 3வது டி20 போட்டியிலும் விளையாட உள்ளது.  அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய சவாலே இதுதான்… முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கவலை!

கடந்த முறை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஆனால், இந்த இரண்டிலுமே தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த முறை நிச்சயமாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது.

இந்திய டி20 அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களை இடம் பெற்று இருக்கின்றனர். குறிப்பாக, அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் 2024, டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்தியாவுக்கு முக்கிய வாய்ந்தவையாக இருக்கும் என்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்) , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்