பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை அணி ..! நமீபியா படுதோல்வி..!
19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12-வது போட்டியாக இன்று இலங்கை அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நமீபியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விக்கெட்டுகளை விட்டு கொடுத்தது.
இலங்கை அணியின் வீரரான சுபுன் வடுகே மட்டும் சற்று நின்று நிதானமாக விளையாடி ரங்களை சேர்த்தார். அவர் மட்டும் ஆட்டமிழக்காமல் 56 ரன்களை சேர்த்திருந்தார். 37.5 ஓவருக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே சேர்ந்திருந்தது. நமீபியா அணியில் வான் வூரன் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!
எளிய இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததால் அந்த அணி 27 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணியில் விஷ்வ லஹிரு, ருவிஷான் பெரேரா இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 77 ரன்கள் வித்யாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இது இலங்கை அணிக்கு இந்த தொடரின் 2 வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.