BANvsSL : வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி, அந்த சுற்றி பயணத்தொடரில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இந்த ஆண்டில் கடந்த மார்ச்-3 தேதி முதல் வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இலங்கை அணி அபாரமாக 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்று 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதன் பிறகு நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் தொடரை வங்கதேச அணி சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், மார்ச்- 22 ம் தேதி தொடங்கிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் என்ற பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று தொடரில் முன்னிலையில் இருந்தது.
மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று இந்த டெஸ்ட் போட்டி தொடரை சமநிலை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வங்கதேச இருந்து வந்தது. இறுதியாக நடந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் அபார பந்து வீச்சாலும், அபார பேட்டிங்காலும் வங்கதேச அணியால் வெற்றியின் அருகில் வரை செல்ல முடியாமல் தோல்வி அடைந்தது.
மேலும், இலங்கை அணியின் அட்டகாசமான ஆட்டத்தால் அந்த அணி 2-வது டெஸ்ட் போட்டியை 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி உள்ளது. கடைசியாக, வங்கதேச அணி 2017 ம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இலங்கைக்கு எதிராக வெற்றியாகும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…