ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா..? என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் ஒத்திவைப்பதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பங்கேற்கும் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,இப்போட்டிகள் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ்,மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் தேதி:
ஒருநாள் போட்டிகள் நடைபெறும் தேதி:
இந்நிலையில்,.டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 21 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
கடைசியாக 2019 இல் இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்டில் விளையாடிய டுவான் ஆலிவியர் டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். க்ளென்டன் ஸ்டூர்மன் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர், அதே நேரத்தில் சிசண்டா மகலா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் முதல் டெஸ்ட் அழைப்புகளைப் பெற்றுள்ளனர்.அதன்படி,
தென்னாப்பிரிக்க அணி(Squad): டீன் எல்கர் (c), டெம்பா பவுமா (vc), குயின்டன் டி காக் (wk), ககிசோ ரபாடா, சரேல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மஹாராஜ், லுங்கி என்கிடி, ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், அன்ரிச் நார்ட்ஜெ, கீகன் பீட்டர்ஸ் , ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், க்ளென்டன் ஸ்டுர்மேன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன், டுவான் ஆலிவியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…