சிக்ஸர் சென்ற பந்து..தடுக்க முயன்று பயங்கரமாக மோதிக்கொண்ட தென்னாபிரிக்கா வீரர்கள்!
டி20 உலகக்கோப்பையை 2024 : சூப்பர் 8 சுற்று போட்டியில் B- பிரிவின் கடைசி போட்டி இன்று நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், தென்னாபிரிக்கா அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், தான். அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அது என்னவென்றால், இரண்டு வீரர்கள் பந்தை தடுக்கும்போது எதிர் எதிரே மோதிக்கொண்டனர். இந்த போட்டியின் இன்னிங்ஸின் 8-வது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். கைல் மேயர்ஸ் அந்த பந்தை எதிர்கொண்டபோது ஓவரின் 5-வது பந்தில் மேயர்ஸ் அபாரமான ஷாட் அடித்தார்.
பந்து உயரத்துடன் சிக்ஸர் செல்ல முயன்றது. அப்போது ககிசோ ரபாடாவும், மார்கோ ஜான்சனும் பந்தை தடுக்க முயன்றார்கள். அப்போது தான், இருவரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டனர். உடனே பிசியோ வந்து அவர்களுக்கு முதலுதவி செய்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த ரபாடா சிறு காயங்களுடன் தப்பினார்.
மார்கோ ஜான்சனுக்கு வயிற்று பகுதியில் வலி மிகவும் எடுத்ததால் மைதானத்தில் வலியால் துடித்தார். தடுக்க முயன்ற அந்த பந்தும் சிக்சருக்கு சென்றது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி, பந்து வீச்சை தேர்வு செய்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின், 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா 15/2 (2 ஓவர்கள்) என்ற நிலையில் மழை தொடங்கியது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதனையடுத்து, DLS விதிப்படி 17 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 123 ரன்களை இலக்காக நிர்ணயிக்கபட்டது. இதன் பின், 16.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாபிரிக்கா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.