நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது.இப்போட்டியில் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய தமீம் இக்பால் 9 ஒவரில் 16 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய முகமது மிதுன் 21 , முஷ்பிகுர் ரஹிம் 78 , மொசாடெக் ஹொசைன் 26 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர்.பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 75 ரன்கள் குவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ், பெஹல்குவேவ் ,இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென்னாப்பிரிக்கா அணி 331 இலக்குடன் களமிறங்கியது தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய க்வின்டன் டி காக் 23 ரன்னில் வெளியேறினார்.
ஐடென் மார்கரம் , டு பிளெஸ்ஸிஸ் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.பிறகு இவர்களின் கூட்டணியை சாகிப் பிரித்தார். ஐடென் மார்கரம் 45 , டு பிளெஸ்ஸிஸ் 62 , மில்லர் 38 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 309 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.மேலும் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…