இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.அதன்பின்னர்,களமிறங்கிய,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால்,1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பார்ல் நகரில் தொடங்குகிறது.தொடரை இழக்காமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது.இதனால்,கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே சமயம்,டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது போன்று ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்கா அணியினர் உள்ளனர்.
அணிகள்:
இந்தியா சாத்தியமான லெவன் அணி:கே.எல்.ராகுல் (கேப்டன்),ஷிகர் தவான், விராட் கோலி,ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),ஷ்ரேயாஸ் ஐயர்,வெங்கடேஷ் ஐயர்,ஆர். அஷ்வின்,ஷர்துல் தாக்கூர்,புவனேஷ்வர் குமார்,ஜஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சாஹல்.
தென்னாப்பிரிக்கா சாத்தியமான லெவன் அணி:குயின்டன் டி காக்,ஜான்மேன் மாலன்,டெம்பா பவுமா (கேப்டன்),ஐடன் மார்க்ரம்,ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், டேவிட் மில்லர்,ஆண்டிலே பெஹ்லுக்வாயோ,மார்கோ ஜான்சன்,கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி,தப்ரைஸ் ஷம்சி.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…