இந்தியாவில் உலககோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. போட்டி அட்டவணை இன்று வெளியிடு.!

இந்தியாவில் நடைபெற உள்ள உலககோபப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாக உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், மும்பை வான்கடே மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. 12 நகரங்களில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது. இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ள இந்த போட்டியின் அட்டவணையானது இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி ஆனது கடைசியாக 2011 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2013இல் ஐசிசி சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. அதன் பிறகு 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025