மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்த வெற்றி கொண்டாட்டம், தற்போது வரை இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை டெல்லி விமானநிலையத்தில் வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு, பிரதமர் மோடி காலை அவரது இல்லத்தில் அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து வெற்றி வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
அதன்பின் இந்திய அணி டெல்லியில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அப்போது இந்திய அணி வந்த விமானத்திற்கு ‘நீர் தூவி’ (Water Salute) மரியாதை செலுத்தி வரவேற்றனர். நேற்று 5 மணி அளவில் இந்த ரோடு ஷோ ஆரம்பிக்கும் என்ற அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை மும்பையில் பெய்த மழையால் இந்த ரோடு ஷோ தாமதமானது.
ஆனால் மழை என்று கூட பாராமல் பல்லாயிரம் ரசிகர்கள் கொட்டும் மழையில் தங்களது வீரர்களுக்காக காத்திருந்தனர். அதன்பின் தற்போது மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் ரோடு ஷோ தொடங்கியுள்ளனர்.
இதில் ஜெய்ஷா உட்பட, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பேருந்தின் மேல் ஏறி நின்று ஆடிப்பாடி ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரோட்டின் இரு பக்கங்களும் ரசிகர்கள் இந்திய கொடியை அசைத்து, இந்திய வீரர்களை வரவேற்று வருகின்றனர்.
அதே வேளை இந்திய வீரர்களும் உலகக்கோப்பையை மாறி மாறி கையில் ஏந்தியபடி ரசிகர்களுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த ரோடு ஷோவில் வான்கடே மைதானம் வரை ரசிகர்களிடையே பயணித்து அப்படியே வான்கடே மைதானம் வரை செல்லவுள்ளனர்.
அதாவது தொடர்ந்து 2 கி.மீ வரை ரசிகர்களின் இடையே பயணிக்க உள்ளனர் இது கிட்ட தட்ட 1 மணி நேரம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி ஊர்வலமான ரோடு ஷோவை பார்க்கும் போது, கடந்த 2007 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற பிறகு இதே போல ரோடு ஷோ சென்றது நமக்கு நினைவூட்டுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…