ஆர்சிபி அணி வேறு மாதிரி இருக்கிறது…ஏபி டி வில்லியர்ஸ்
வருகின்ற சனிக்கிழமை இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணிக்கும் நடக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக இந்த இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வருடம் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள், மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது அணியை பற்றி கூறியுள்ளார்.
அதில் ஏபி டிவில்லியர்ஸ் கூறியது இதுவரை இல்லாதது போல் இந்த வருடம் கண்டிப்பாக ஆர்சிபி அணியை வேறு மாதிரி இருக்கிறது. அதை என்னால் சொல்ல முடியும். மிகவும் சிறந்த அணி இதுதான் என்று நான் கூற மாட்டேன், ஆனால் அணியில் இப்போது ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
எங்கள் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கடின உழைப்பு மற்றும் மிகவும் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அணியை சிறப்பாக வழிநடத்த முக்கிய காரணமே விராட் கோலி தான் என்றும் கூறியுள்ளார்.