116 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 53-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் –டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதீயது.
இந்த போட்டியானது, டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அஜிங்க்ய ரஹானே,லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அஜிங்க்ய ரஹானே 2 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். குறைந்த ரன்னில் லியாம் லிவிங்ஸ்டோன் (14) விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் மணிபால் லோமோர் அடுத்த அடுத்த தனது விக்கெட்டை பறிகொடுத்தார்கள். அடுத்த களமிறங்கிய ரியான் பராக் 50ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா தலா 3விக்கெட்டையும், ட்ரெண்ட் பொல்ட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் களமிறங்க உள்ளது டெல்லி அணி.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024