பிரச்சனை இருப்பதால் தான் செல்ஃபியில் ரோகித் இல்லை !

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன் கேப்டன் விராட் கோலியும் , பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரோஹித் சர்மாவுடன் பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விராட் கோலி , நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வறையில் நடக்கும் விஷயம் முக்கியமானது. இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால் நாங்கள் நன்றாக விளையாடி இருக்க முடியாது.
ஒரு நபரை பிடிக்க வில்லை என்றால் அவரிடம் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பது முகத்தில் நீங்கள் பார்க்கலாம். எப்போதும் ரோஹித் சர்மாவை பாராட்டி தான் வருகிறேன். எங்களுக்கும் இந்த பிரச்சினை இல்லை என கூறினார்.
மேலும் இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். இந்நிலையில் மியாமை நோக்கி நேற்று இந்திய அணி புறப்பட்டனர். அதற்கு முன் இந்திய வீரர்களுடன் கேப்டன் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.ஆனால் அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மா இல்லை.உங்களுக்குள் பிரச்சனை இல்லை என்றால் ரோகித் சர்மா எங்கே ? ரோகித் சர்மா உடன் பிரச்சனை இருப்பது உண்மைதான் அதனால் தான் ரோஹித் சர்மா புகைப்படத்தில் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025