இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியைக் காண, இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் வந்துள்ளனர்.
தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டி இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணி வீரர்களை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்தார், இதேபோல் ஆஸ்திரேலிய பிரதமரும் தனது நாட்டு வீரர்களை சந்தித்து உற்சாகம் அளித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 75 வருட கிரிக்கெட் நட்பினை வெளிப்படுத்தும் விதமாக இரு பிரதமர்களுக்கு, பிசிசிஐ தரப்பில் சிறப்பு உருவம் பொறித்த கலைப்பரிசு வழங்கப்பட்டது.
போட்டிக்கு முன்னதாக, இரு பிரதமர்களும் கோல்ஃப் வண்டியில் வடிவமைக்கப்பட்ட “தேரில்” அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வலம் வந்தனர். இரு நாட்டு பிரதமர்களும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு மைதானத்தை சுற்றி வந்தனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…