ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டம்?

Published by
பால முருகன்

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் வீரர்கள் மட்டும் விளையாடி வந்தனர். இதற்கிடையில், 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

இந்த நிலையில், மீதமுள்ள  ஐபிஎல் போட்டிகளை வருகின்ற செப்டம்பர் மாத பாதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ஏனெனில்  இந்தியாவ இங்கிலாந்து மற்றும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிகிறது. இதனால் செம்டம்பர் மாத பாதியில் முடிவதால் மீதியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியது ” ஐபிஎல் போட்டிகள் நடத்த சர்வதேச அணிகளின் அட்டவணையின்படி, தேதிகள் கிடைக்குமா என முதலில் பார்க்க வேண்டும். அடுத்து ஐபிஎல் போட்டிகளை நடந்த தேதிகள் கிடைத்தால் அதைப் பற்றி ஆலோசனை நடித்து முடிவு எடுக்கப்படும், செப்டம்பரில் இது நடக்குமா என்று நாம் பார்க்க வேண்டும். ஐ.சி.சி மற்றும் பிற வாரியங்களின் இணைந்து ஆலோசனை நடத்தி  கலந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: BCCIipl2021

Recent Posts

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

7 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

9 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

9 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

11 hours ago

விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…

11 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

12 hours ago