ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டம்?
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் வீரர்கள் மட்டும் விளையாடி வந்தனர். இதற்கிடையில், 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை வருகின்ற செப்டம்பர் மாத பாதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ஏனெனில் இந்தியாவ இங்கிலாந்து மற்றும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிகிறது. இதனால் செம்டம்பர் மாத பாதியில் முடிவதால் மீதியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியது ” ஐபிஎல் போட்டிகள் நடத்த சர்வதேச அணிகளின் அட்டவணையின்படி, தேதிகள் கிடைக்குமா என முதலில் பார்க்க வேண்டும். அடுத்து ஐபிஎல் போட்டிகளை நடந்த தேதிகள் கிடைத்தால் அதைப் பற்றி ஆலோசனை நடித்து முடிவு எடுக்கப்படும், செப்டம்பரில் இது நடக்குமா என்று நாம் பார்க்க வேண்டும். ஐ.சி.சி மற்றும் பிற வாரியங்களின் இணைந்து ஆலோசனை நடத்தி கலந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.