அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

'Impact Player' விதிமுறையை பிசிசிஐ நீக்குமா? இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

impact player rule in ipl

துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

எனவே, ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளின்  கேப்டன்களுடன் இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த கேப்டன்களின் கூட்டத்தில் ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், பலரும் இந்த விதி வேணாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Impact player விதி என்றால் என்ன? 

“இம்பாக்ட் பிளேயர்” விதி என்பது, ஐபிஎல் போட்டியில் ஒரு அணியின் வழக்கமான 11 வீரர்களுடன் கூடுதலாக 5 வீரர்களை மாற்று வீரர்களாக அறிவித்து, தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது ஒரு வீரரை மாற்றி கொள்ளலாம். 14வது ஓவருக்குள் இந்த ‘Impact Player’ விதிமுறையை பயன்படுத்தியாக வேண்டும். இந்த விதியை பிசிசிஐ கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது கொண்டு வந்தது.

கிளம்பிய எதிர்ப்புகள் 

இந்த விதிகள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், மொயின் அலி, ரவி சாஸ்திரி, கௌதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள்.

ரவி சாஸ்திரி: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, Impact Player விதி அணியின் சமநிலையை மாற்றி விடும். இது அணியின் யுத்தத்திட்டத்தை மிகுந்த அளவில் மாற்றும் என்பதால், கிரிக்கெட் பாரம்பரியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது” என தெரிவித்தார்.

கௌதம் கம்பீர்: முன்னாள் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர், இந்த விதி வீரர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். மாற்று வீரராக வருவது அல்லது மாற்றப்படுவது வீரர்களுக்கு நெருக்கடியான அனுபவமாக இருக்கும். இதனால் அவர்கள் திட்டமிட்டபடி விளையாட திணறவாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தார்.

இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் இந்த விதி மீது இருக்கும் எதிர்ப்பு குறைந்தபாடு இல்லை. எனவே, இன்று நடைபெற்று வரும் Impact player விதியை நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்து இந்த விதி நீக்கம் செய்யப்பட்டது என்றால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்