அடுத்த வாரம் சென்னை வருகிறார்கள் CSK வீரர்கள்..!
இந்த மாதம் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வருகின்ற 21 ம் தேதி அமீரகம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு வீரர்கள் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி வருகின்ற 14 ம் தேதி சென்னைக்கு வரவுள்ளார் என்று கூறப்படுகிறது.