இந்திய அணிக்கு அந்த பாகிஸ்தான் வீரர் தான் சவாலாக இருப்பார் – டாம் மூடி!

Tom Moody

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகிறது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர்  2-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணியும் – இந்திய கிரிக்கெட் அணியும் மோதவுள்ளது. அந்த போட்டியை காண தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட  இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், ஆஸ்ரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேக பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிடியின் பந்து வீச்சு சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சு சவால்

இது குறித்து பேசிய டாம் மூடி ” ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று திணற வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன். அவர் வீசும் ஃபுல் ஸ்டாப் பந்தில் பல விக்கெட்கள் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். நடைபெறவுள்ள போட்டியில் மட்டுமில்லை இதற்கு முன்பாகவும் அதை அவர் வரலாற்று ரீதியாக செய்துள்ளார்.

ஒரு வேலை ஷாஹீன் அப்ரிடி முதல் 5 ஓவர்களில் பந்து வீச வந்தால் இந்திய அணியின் ஆரம்ப ஜோடி விக்கெட்டுகளை அவர் எடுத்துவிடுவார். அதைப்போல, விக்கெட்கள் விழுந்தால் இந்திய அணி மிடில் ஆர்டர் மீண்டும் ரன்களை அடிக்கவேண்டும்.

ஆஷஸை மிஞ்சும்

இந்தப் ஆசிய 2023 கிரிக்கெட் போட்டி ஆஷஸை மிஞ்சும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், 2-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. எனவே, இதற்கு எப்போதும் ஒரு அழகான கதை உண்டு, இரண்டுமே சிறந்த கிரிக்கெட் நாடுகள். அதாவது நான் இந்தியா – பாகிஸ்தான் அணியை சொல்கிறேன். இந்திய அணியை போலவே, பாகிஸ்தான் அணியைப் பார்க்கும்போது, அதிலும் பல வீரர்கள் தங்களுடைய திறமைகளை அழகாக காமிக்கிறார்கள்.

அச்சுறுத்தலாக உள்ளனர்

பாகிஸ்தான் அணி இப்போது அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் கலவையைக் சிறப்பாக கொண்டுள்ளனர், அவர்கள் ஒரு உண்மையான அச்சுறுத்தலாக தற்போது மற்ற அணிகளுக்கு இருக்கிறார்கள். குறிப்பாக பாபர் அசாம் போன்றவர்கள் மீது வைக்கும் சுவாரசியமான வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் நினைக்கிறேன் ‘ எனவும் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்