இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த பாகிஸ்தான் அணி
நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபார்கார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக இருவரும் விளையாடினர்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் போராடினர். அப்போது மோயீன் அலி தனது பந்து வீச்சில் ஃபார்கார் ஜமானை 36 ரன்னில் அவுட் ஆக்கினார்.
பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் , இமாம் உடன் கூட்டணியில் இணைத்தார்.சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய இவர்களை மீண்டும் மோயீன் அலி இமாம் உல்-ஹக் 44 ரன்னில் அவுட் செய்தார்.
அதன் பின்னர் பாபர் ஆசாம் 63 ரன்னிலும், முகமது ஹபீஸ் 84 ரன்னிலும், சர்பாராஸ் அஹ்மத் 55 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 84 ரன் அடுத்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் மோயீன் அலி ,கிறிஸ் வோக்ஸ் தலா3 விக்கெட்டையும் , மார்க் வூட் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
இங்கிலாந்து அணி 349 ரன்கள் இலக்குடன் ஜேசன் ராய் , ஜன்னி பைர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்த ஜேசன் ராய் 8 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் , ஜன்னி பைர்ஸ்டோவ் இருவரும் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.பின்பு ஜன்னி பைர்ஸ்டோவ் 32 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியாக 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி அதிகபட்சமாக ஜோ ரூட் 107 ரன்னும் ,ஜோஸ் பட்லர் 103 ரன்னும் குவித்தனர்.
மேலும் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டியில் டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.