இந்தியாவின் படுதோல்வி.. OTP எண்களை வைத்து விமர்சித்த ஷேவாக்!

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்களை இழக்க, இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து விராட் கோலி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட மோசமான பேட்டிங் இருக்க முடியாது என கூறினார்.

மேலும் பேசிய அவர், அணி வீரர்களிடம் டெஸ்ட் போட்டிக்கான தீவிரத்தன்மை இல்லை எனவும், இந்த தோல்வியிலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்டில் வலுவாக மீண்டு வருவார்கள் என தெரிவித்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக இந்திய அணி எடுத்தது.

இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து முன்னணி வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், “மறக்க வேண்டிய ஓடிபி எண் 49204084041” என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் பார்வையில் வைரலாக, இதுபோன்ற தவறுகளை டெஸ்ட் போட்டியில் மீண்டும் செய்யாது என்று நம்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்