சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் விளாசிய விராட் கோலிக்கு போட்டி முடிந்த பிறகு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் எந்த வீரர் ஆரஞ்சு தொப்பியை வாங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்த ஆண்டு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்சன், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஆகியோர் டாப் 5 இடத்தில் ஆரஞ்சு கேப் பட்டியலில் உள்ளனர்.
இதில், சூர்யகுமார் யாதவ் கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இவர் இந்த சீசனில் அதுவரை 10 போட்டிகள் விளையாடி 427 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அந்த போட்டியில் மும்பை வெற்றிக்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ் ” நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ஆரஞ்சு தொப்பியை அணிவது இதுவே முதல் முறை” என மிகவும் மகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
அவர் பேசியிருந்த சில மணி நேரங்களில் அவருடைய ஆரஞ்சு தொப்பியை கிங் கோலி பிடிங்கிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், மும்பை லக்னோ அணிகள் மோதிய அதே நாளில் தான் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியும் நடைபெற்றது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸுடன், கோலியின் மொத்த ரன்கள் இந்த சீசனில் 447 ரன்களை எட்டியது,
எனவே, அவருக்கு ஆரஞ்சு கேப் போட்டி முடிந்த பிறகு வழங்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் வாங்கிய கொஞ்ச நேரத்தில் விராட் கோலி பிடிங்கிவிட்டார் என ஒரு பக்கம் நெட்டிசன்களும் மற்றொரு பக்கம் சூர்யகுமார் யாதவ் திரும்ப ஆரஞ்சு தொப்பியை வாங்குவார் எனவும் கூறி வருகிறார்கள்.
ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் உள்ள 5 வீரர்கள்
- விராட் கோலி – 10 போட்டிகளில் 443 ரன்கள்
- சூர்யகுமார் யாதவ் – 10 போட்டிகளில் 427 ரன்கள்
- சாய் சுதர்சன் – 8 போட்டிகளில் 417 ரன்கள்
- நிக்கோலஸ் பூரன் – 10 போட்டிகளில் 404 ரன்கள்
- மிட்செல் மார்ஷ் – 9 போட்டிகளில் 378 ரன்கள்
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025