இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கே.எல்.ராகுல் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்திய அணி தோனி தலைமையில், இருக்கும் போது டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. மேலும் ஐசிசி நடத்தும் இந்த மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனி வைத்துள்ளார்.
இந்நிலையில், தோனி குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் “தோனி நம் நாட்டுக்காக பல முக்கியமான கோப்பைகளை கேப்டனாக இருந்து பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தியாவுக்காக நிறைய பெருமைகளை தேடி தந்துள்ளார். நான் இவற்றை எல்லாம் விட பெருமையாக நினைப்பது என்னவென்றால் சக வீரர்களை மரியாதையுடன் நடத்துவதுதான். அவரிடம் எனக்கு இந்த விஷயம் மிகவும் பிடிக்கும். அவர் சொன்னால் துப்பாக்கி குண்டுகளை எந்தவித யோசனையும் இன்றி தாங்கிக்கொள்வேன்.
கேப்டன் என்றால் முதலில் எங்கள் நினைவுக்கு வரும் பெயர் தோனி மட்டும்தான். ஏனென்றால் அவர் ஒரு சகாப்தம். தோனி கேப்டனாக இருக்கும் போது அவரின் கீழ் விளையாடிய வீரர்கள் இப்பொது விளையாடிக்கிறார்கள் அவர்களிடம் இருந்தது சில நல்ல விசியங்களை கற்று கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…