நியூசிலாந்து அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை…!
-
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது,டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இதன்காரணமாக,நியூசிலாந்து அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில்,தனது முதல் டெஸ்ட் தொடரை வென்று சாதனை.
இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.அதில்,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒன்றுகொன்று மோதிக்கொண்டன.
அதன்படி,முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர்,303 ரன்கள் எடுத்தனர்.ஆனால்,பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 388 ரன்கள் எடுத்து முதல் தொடரைக் கைப்பற்றினர்.
இரண்டாவது தொடரில் வெறும் 122 ரன்களை மட்டுமே இங்கிலாந்து எடுத்தது.இதனால்,38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி,எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில்,தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
இதன்காரணமாக,22 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதால் இந்த நிகழ்வு ஒரு மாபெரும் சாதனையாக மாறியது.
இதனையடுத்து,இந்த தொடரை வென்றதன் மூலம்,ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் 123 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியினர் முதலிடம் பிடித்தனர்.இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.