ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தசை பிடிப்பு காரணமாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதில் சந்தேகம்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர்-12 போட்டிகள் நிறைவடையும் நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டியின் போது ஏற்பட்ட தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாடும் போட்டிகளில் ஆரோன் பின்ச் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் 5 புள்ளிகளைப் பகிர்ந்து ரன் ரேட் அடிப்படையில் 3 ஆவது இடத்தில இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி நாளை வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஆரோன் பின்ச் காயத்தால் அவதிப்படுவது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பாதிப்பாகவே கருதப்படுகிறது. இது குறித்து அவர் பேசுகையில், நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, எனது வலி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் டிம் டேவிட்டும் இதே போன்று தசை பிடிப்பின் காரணமாக அவதிப்படுவதால் அவர் விளையாடுவதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்ச் மற்றும் டேவிட் ஆகியோர் விளையாடுவதில் இதுவரை எந்த உறுதிப்பாடும் அணி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…