2020-ல் ட்விட்டரில் அதிக லைக்ஸ் பெற்ற கோலி-அனுஷ்கா புகைப்படம்!
ட்விட்டர் நிர்வாகம் இந்தாண்டு அதிகளவில் லைக், ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இதில் இந்தியாவில் விராட் கோலி, தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் அதிக லைக்ஸை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ரன் மெஷின், கிங் கோலி என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் அர்ஜுனா, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட முக்கிய விருதுகளை வாங்கினார். தனது 15 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கிய கோலி, தனது 16 வயதில்முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடினார். அப்பொழுது அவர் ஆடிய ஒரு போட்டியில் தனது தந்தை இறந்தது கூட தெரியாமல், சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இது, பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் 2011 ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கோலி இடம்பிடித்தார். அதனைதொடர்ந்து ஓருநாள், டி-20 என அனைத்து வகை போட்டிகளிலும் கலந்துக்கொண்டு, சிறப்பாக ஆடி, அப்போதைய தோனி தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக பதவிவகித்து, பின்னர் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி வகித்தார்.
டெஸ்ட் போட்டிகளிலும் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற சாதனையும், முதன்முதலாக மூன்று விதமான போட்டிகளிலும் சராசரியாக 50 எகனாமி வைத்து விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்த கோலி, 2017ஆம் ஆண்டு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் தனது பணியை சிறப்பாக ஆற்றிவருகிறார்.
அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் தேதி அவர் அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துக் கொண்டார். அதுதொடர்பான புகைப்படங்களும் அண்மையில், அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் பொழுது ஒரு புகைப்படம் எடுத்து கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம், 2020 ஆம் ஆண்டில் அதிக லைக்குகளை பெற்ற புகைப்படம் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The most Liked Tweet of 2020
2020 का सबसे ज्यादा लाइक किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் லைக் செய்யப்பட்ட டுவீட் pic.twitter.com/lMN18Z5KEd— Twitter India (@TwitterIndia) December 8, 2020