ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
17 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் இடம் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்று விளையாடுவார்கள். கடைசியாக இந்த தொடர் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
அதை தொடர்ந்து ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்), இனி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடைபெறாது எனவும், ஒவ்வொரு பதிப்பிலும் (edition), ஒரு சர்வேதேச தொடர் மட்டும் தான் இனி நடைபெறும் அதாவது டி20யில் ஒரு சர்வதேச தொடர், 50 ஓவரில் ஒரு சர்வதேச தொடர் என ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு சர்வேதச தொடர் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவித்தது. அதன் பின் கடந்த 2021 -ம் ஆண்டு மீண்டும் 2025 ம் ஆண்டில் மீண்டும் சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
இதனால் அடுத்த வருடம் 2025-ல், இந்த சாம்பியன்ஸ் டிராபி, பாகிஸ்தானில் நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடருக்கான அட்டவணையை இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்கள் நடைபெறும் இந்த தொடரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் மற்றும் ராவில்பிண்டியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா ? என்பது குறித்து இன்னும் முடிவாகமலே இருக்கிறது. இதே போல சமீபத்தில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்ற போது இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என அறிவித்த போது இந்திய அணியின் போட்டிகளை மட்டும் இலங்கையில் நடத்தினார்கள்.
இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதே கேள்வி குறியாக இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் பாதுகாப்பு கருதி இந்திய அணி விளையாடும் போட்டிகளை லாகூர் மைதானத்தில் மட்டும் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும், இந்தியாவுக்கு அருகில் லாகூர் இருப்பதால் அது இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலும் ஒரு பாதுக்காப்பாக இருக்கும் எனவும், ரசிகர்களும் போட்டியை காண எளிதாக இருக்கும் எனவும் எண்ணி இந்த திட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது என தகவல்கள் வெளியாகிறது. இருப்பினும், இந்திய அணி ஒத்துழைத்து பாகிஸ்தான் செல்வார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருந்தே பார்க்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025