இன்று ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக,ஒரே நேரத்தில் இரண்டு லீக் போட்டிகள்…!
ஐபிஎல்:எம்ஐ மற்றும் எஸ்ஆர்எச்,ஆர்சிபி மற்றும் டிசி இடையேயான போட்டிகள் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன.
அக்டோபர் 15 ஆம் தேதியுடன் ஐபிஎல் 14-வது சீசன் முடிவடையவுள்ளது. அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடினாலும்,சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில்,இன்றுடன் ஐபிஎல் 2021 இன் லீக் போட்டிகள் முடிவடையவுள்ளது.அதே சமயம்,வரலாற்றில் முதல் முறையாக கடைசி இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் இன்று நடைபெறவுள்ளன. இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்களிடையேமிகவும் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எஸ்ஆர்ஹெச் 13 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, வெறும் ஆறு புள்ளிகளுடன் அட்டவணையில் பின்தங்கி, பிளேஆஃப்க்கு வெளியே உள்ளது. எம்ஐ ஐப் பொறுத்தவரை, 13 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகள் மற்றும் 12 புள்ளிகள் பெற்று இது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சாத்தியமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (சி), ப்ரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (wk), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.
சாத்தியமான மும்பை இந்தியன்ஸ் அணி:ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கியரோன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர்/ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
பெங்களூர் மற்றும் டெல்லி அணி:
அதேநேரம்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆர்சிபி அணியானது இதுவரை 13 போட்டிகளில் எட்டு போட்டியில் வெற்றி 5 போட்டிகளில் தோல்வியுற்று, 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டிசியைப் பொறுத்தவரை,மொத்தம் 13 போட்டிகளில் 10 இல் வெற்றி பெற்று 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சாத்தியமான ஆர்சிபி அணி: விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், AB டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.
சாத்தியமான டிசி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (சி & விகே), ரிபால் படேல், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே.