முடிவைப் பற்றி யோசிப்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் தேவை என நேற்றைய போட்டி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து.
ஐபிஎல் என்றாலே சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு ரசிகர்கள் ஏராளம், இந்த நிகழ் மோதிக்கொள்ளும் பொது டிஆர்பி, வியூஸ் சாதனை படைக்கும். அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே டிவி முன்பு தான் இருக்கும். அந்த அளவிற்கு அதிக ரசிகர்களை கொண்ட அணிகள் தான். முதல் சுற்றில் சென்னை – மும்பை அணிகள் மோதியதில் சென்னை வெற்றி பெற்றது.
சென்னை – பெங்களூரு:
இந்த சமயத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை – பெங்களூரு அதாவது குரு, சிஷியன் சொல்லப்படும் சவுத்தென் டெர்பி என்று கூறப்படும் சென்னை – பெங்களூரு அணிகள் நேற்று சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்டனர். பெங்களூரு அணிக்கு உள்ளூர் போட்டியாக இருந்தாலும், மைதானம் முழுவதும் மஞ்சளும் நிரம்பி இருந்தது.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி:
முதலில் களமிறங்கிய சென்னை அணியில், நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், மறுபக்கம் கான்வே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அஜிங்க்யா ரஹானே 37 ரன்கள் என களம் கண்ட அனைவரும் அவர்களது ஈடுபாட்டை காண்பித்தனர். இறுதியாக அனைவரும் எதிர்பார்த்த தோனி தரிசனம் கிடைத்தது, ஆனால், ஒரு பந்து மட்டுமே எதிர்கொண்டார்.
ரன் மழை:
இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாங்குறு அணியில், விராட் கோலி 6 ரன்களில் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஜோடி சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். வெறும் சிக்ஸர் மழையாக பொழிந்தது. இருவரும் குறைந்த பந்துகளில் அரை சதத்தை எடுத்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் காலத்தில் இருக்கும் போது போட்டி 17, 18 முடிந்துவிடும் நிலை இருந்தது.
போட்டியில் ட்விஸ்ட்:
அந்த மாறி அதிரடியாக விளையாடினர். இருப்பினும், எதிரணி சென்னை என்பதாலும், கேப்டன் தோனி என்பதாலும், போட்டியில் ட்விஸ்ட் ஏற்பட்டது. சிறப்பாக விளையாடி வந்த டு பிளெசிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இறுதி ஓவரில் 1 பந்திற்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது பெங்களூரு. இறுதி ஓவர் வீசிய சென்னை வீரர் ஜூனியர் மலிங்க என்று அழைக்கப்படும் மதீஷ பத்திரன சிறப்பாக வீசி வெற்றியை பெற்று தந்தார்.
தோனி கருத்து:
சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புல்லளி பட்டியலில் 3 இடத்துக்கு முன்னேறியது. போட்டிக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், டு பிளஸிஸ், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் 18வது ஓவரிலேயே ஆட்டம் முடிந்திருக்கும். முடிவைப் பற்றி யோசிப்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் எப்போதும் ஈடுபடுவேன் என தெரிவித்தார். மேலும், இளம் வீரர்களுக்கு கடினமானது, இது ஒரு குழு விளையாட்டு. பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் மூத்த வீரர்கள் அவர்களை வழிநடத்துகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…