முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 60 ரன்னில் எல்பிடபிள்யூ அவுட்டானார். பின்னர் களமிறங்கிய புஜாரா வந்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாச இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்க இருந்தநிலையில் தொடர் மழை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. நாளையை மூன்றாம் நாள் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…