மதுரை பாந்தர்ஸ்அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி !
நேற்று நடந்த டிஎன்பிஎல் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும் Vs மதுரை பாந்தர்ஸ் அணியும் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் திண்டுக்கல் டிராகன் அணியின் தொடக்க வீரராக ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி திணறியது.
சிறப்பாக விளையாடி வந்த ஹரி நிஷாந்த் , ஜெகதீசன் அரைசதம் நிறைவு செய்தனர். இந்நிலையில் 13.2 ஓவரில் ஹரி நிஷாந்த் 45 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி வந்த ஜெகதீசன் 87 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் டிராகன் அணி 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக், சரத் ராஜ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி வந்த அருண் கார்த்திக் 24 ரன்களில் வெளியேற பின்னர் ஜெகதீசன் களமிறங்கினார்.
சிறப்பாக விளையாடி வந்த சரத் ராஜ் 26 ரன்களில் அவுட்டானார். பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 9 விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன் அணியிடம் தோல்வியை தழுவியது.