சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யாஅனைவ்ருடைய கவனத்தை ஈர்த்துள்ளார்.

Priyansh Arya

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய கவனத்தை ஈர்த்துவிடுவார்கள். அப்படி தான் இன்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்தை சிக்சருடன் தொடங்கி சதம் விளாசி (103) தனது ஆட்டத்தை முடித்தார்.

இவருடைய அதிரடி ஆட்டத்தை பார்த்து சென்னை பந்துவீச்சாளர்கள் மிரண்டு விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். சென்னை அணியின் பந்துவீச்சில் தூணாக இருக்கும் பதிரானாவின் பந்துவீச்சையும் பிரியான்ஷ் ஆர்யா சிக்ஸர் விளாசினார். பதிரானாவின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர் விளாசி யார்ரா இந்த பையன் என யோசிக்க வைத்துவிட்டார். 9 சிக்ஸர், 7 பவுண்டரி என 39 பந்துகளில் சதம் விளாசிய பிரியான்ஷ் ஆர்யா பெயர் தான் ட்ரெண்டிங்காகவும் மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா என தேட தொடங்கிவிட்டார்கள். அவர் யார் இதற்கு முன்பு எந்தெந்த அணிகளுக்காக எந்தெந்த போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறித்து பார்ப்போம்.

யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

டெல்லியைச் சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் (Sanjay Bhardwaj) என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார். டெல்லியில், அவருடையபெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட பிரியான்ஷ் சிறப்பாக பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். இவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை ஒரு சிறந்த வீரராக உருவாக்கியது.

அதன்பிறகு அவருக்கு டெல்லி பிரீமியர் லீக் (Delhi Premier League) தொடரில் தனது திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்தது.  ஓல்டு டெல்லி 6 அணிக்கு எதிராக 30 பந்துகளில் 57 ரன்களும், சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 82 ரன்கள் (7 சிக்ஸர்கள்) எடுத்து அனைவரையும் கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து, ஈஸ்ட் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 53 ரன்கள், ஓல்டு டெல்லி 6 அணிக்கு எதிராக 55 பந்துகளில் 107 ரன்கள், சென்ட்ரல் டெல்லி அணிக்கு எதிராக 42 பந்துகளில் 88 ரன்கள் என தொடர்ந்து சிறப்பாக ஆடினார்.

அதைப்போல, நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார், அதிலும் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து அரங்கையே அதிர வைத்தார். இந்த அதிரடி ஆட்டம் தான் அவருக்கு (Syed Mushtaq Ali Trophy) தொடரில்  விளையாடவும் வாய்ப்புகளை தேடி தந்தது. அங்கு உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக 43 பந்துகளில் 102 ரன்கள் (5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். பிறகு அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்புகள் கிடைத்து சென்னைக்கு எதிரான போட்டியில் தனது திறமையை நிரூபித்தார்.

மேலும், சென்னை அணிக்கு எதிராக அவர் அடித்த இந்த சதம் அவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு வலிமையான அணிக்கு எதிராக, அதுவும் ஒரு இளம் வீரராக இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவரது திறமையையும் மன உறுதியையும் காட்டுகிறது. இதன் மூலம், அவர் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்