ஐபிஎல்லில் ஒரே நேரத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டிகள்..!

கடைசி 2 லீக் 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7;30 மணிக்கு அக்டோபர் 8-ஆம் தேதி நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளது. பொதுவாக ஒரே நாளில் இரு போட்டிகள் நடைபெறும் போது முதல் போட்டி பிற்பகலிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறும். நடப்பு சீசனில் கடைசி 2 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் ஹைதராபாத் – மும்பை அணியும், டெல்லி – பெங்களூர் அணியும் மோதுகிறது. ஹைதராபாத் – மும்பை அணி மோதும் போட்டி பிற்பகலிலும், டெல்லி – பெங்களூர் அணி மோதும் போட்டி இரவிலும் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்த 2 போட்டிகளையும் ஒரே நேரத்தில் அதாவது இரவு 7;30 மணிக்கு நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதியதாக பங்கேற்கவுள்ள 2 புதிய அணிகள் வருகின்ற அக்டோபர் 25-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025