செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது ஐபிஎல் தொடர்… முதல் ஆட்டமே சென்னை Vs மும்பை பலப்பரிட்சை!!
நடப்பாண்டில் மீதமுள்ள ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 14 வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. அதற்கான போட்டி பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதுவரை நடப்பாண்டு விவோ ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், மீதம் 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, மொத்தம் 31 போட்டிகள் 27 நாட்களில் நடைபெறும். அக்டோபர் 15 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.
செப்டம்பர் 19ம் தேதி துபாயில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை செய்கிறது. இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போதும் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தத்தில், 13 போட்டிகள் துபாயிலும், 10 ஷார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. முதல் (Qualifier) துபாயில் அக்டோபர் 10ம் தேதியும், எலிமினேட்டர் & இரண்டாவது (Qualifier) அக்டோபர் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. மேலும், விவோ ஐபிஎல் 2021 இன் இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. எனவே, மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட இந்த அணிகளின் மோதலுடன் ஐபிஎலின் 2வது பாதி தொடங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 8 போட்டிகள் விளையாடி, 6 போட்டிகளை வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தியும், 7 போட்டிகளை சந்தித்துள்ள சென்னை 5 போட்டிகளை கைப்பற்றி புள்ளி பட்டியலில் 10 புலிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
BCCI announces schedule for remainder of VIVO IPL 2021 in UAE.
The 14th season, will resume on 19th September in Dubai with the final taking place on 15th October.
More details here – https://t.co/ljH4ZrfAAC #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) July 25, 2021