‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.
நேற்று நடைபெற்ற ஐபில் தொடரின் 48-வது போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. இதற்கு முன் லக்னோ அணி, ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டியில் 196 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. அதன் பிறகு நேற்று நடைபெற்ற போட்டியில், இனி வரும் அனைத்து போட்டியும் முக்கியம் என்பதை உணர்ந்து விளையாடி வெற்றியை பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்படியலில் 3-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது. இந்த போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடர் உலகக்கோப்பையை போன்றது என பேசி இருந்தார். இது குறித்து பேசிய அவர், “இந்த ஐபிஎல் போட்டி இவ்வளவு சிறப்பானது என்று நான் ஆச்சர்யபடுகிறேன்.
மேலும் எனது கண்ணோட்டத்தில் இந்த ஐபிஎல் தொடர் என்பது ஒரு உலகக்கோப்பையை போன்றது. இங்கு எளிதாக ஒரு போட்டியும் அமைவது இல்லை, இந்த தொடரில் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது. புள்ளிபட்டியலில், புள்ளிகள் எவ்வளவு இருக்கமாக இருக்கிறது என்று நாம் தினமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறறோம். இன்றைய நாளில் எங்கள் அணி அந்த புள்ளிகளை எடுத்துக்கொள்வது மிகவும் மதிப்புமிக்கது.
மேலும், குறிப்பாக இதற்கு முன் நாங்கள் விளையாடிய ராஜஸ்தானுடனான போட்டியில் ஏமாற்றமளிக்கும் தோல்விக்குப் பிறகு நாங்கள் மிகவும் போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இதுதான் தான் ஒரு நல்ல அணிக்கு அடையாளம்”, என்று போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் அளித்த பேட்டியில் கூறி இருந்தார்.