கோலாகலமாக தொடங்கிய “ஐபிஎல்” திருவிழா: மும்பை அணியில் இணைந்த ‘ஹிட் மேன்’ .!

Default Image

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிக்காக மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, கேமரூன் கிரீன் ஆகியோர்  இணைந்துள்ளனர். 

2023- ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களுடைய அணிகளில் இணைந்த வீரர்கள் பற்றிய அறிவிப்பை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மும்பை அணி அதிரடியான இரண்டு வீரர்கள் பயிற்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஐபிஎல் 2023 ஏலத்தில் 17.5 கோடிக்கு மும்பை அணி வாங்கிய பிறகு, முதன்முறையாக கேமரூன் கிரீன் மும்பை அணிக்காக விளையாட வந்துள்ளார்.

ரோஹித் சர்மா மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் அணியில் இணைந்துள்ளதற்கான வீடியோவைய மும்பை அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடியோவில் ரோஹித் சர்மா தனது சக வீரர்களுடன் உரையாடுவது காணப்டுகிறது.

மேலும், மும்பை அணி தனது முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த போட்டி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்