IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!
IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது.
Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..!
தற்போது அந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் ஐபிஎல் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டாடி தீர்த்தனர். ஐபிஎல் தொடர் ஆரம்பம் முதலே, முதல் போட்டிக்கு முன்பு ஐபிஎல் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக அமையும் வகையில் திருவிழா போல கலைநிகழ்ச்சியை நடத்தி வருவது ஐபிஎல் நிர்வாகத்தின் வழக்கமாகும்.
அதே போல இந்த ஐபிஎல்லிலும் முதல் போட்டிக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த முறை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை ஹிந்தி நடிகர்களான அக்ஷய் குமாரும், டைகர் ஷெராப்பும் நடனமாடி தொடங்கி வைத்தனர். அவர்களை தொடர்ந்து இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரது இசைக்குழுவோடு ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி இசை நிகழ்ச்சியை தொடஙகினார். ஹிந்தி பாடலை பாடிய அவர் திடீர் என்று அவர் இசை அமைத்த ‘சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘பல்லே லக்கா’ படலை பாடினார்.
Read More :- எங்களுக்கே தெரியாதுங்க..’எல்லாம் தோனி முடிவு தான்’ ! சிஸ்கே CEO காசி விஸ்வநாதன் பேச்சு!
அவருடன் ரசிகர்களும் பாட சேப்பாக்கம் மைதானமே இசை கச்சேரியில் மூழ்கியது போல காட்சியளித்தது. இறுதியாக ‘ஜெய் ஹோ’ பாடலை பாடி ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதுவரை ஐபிஎல் தொடருக்கு கிடைக்காத ரசிகர்களின் வரவேற்பு இந்த 17-வது சீசன் ஐபிஎல் தொடருக்கு மிக பெரும் அளவிற்கு கிடைத்துள்ளது.