இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய இந்திய மகளிர் அணி! 82 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!

இன்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

INDW vs SLW

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 12-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் கடந்த 2 போட்டிகளை போல சொதப்பாமல் மிகவும் நிதானமான ஆட்டத்தை  முதலில் வெளிப்படுத்தினர். அதன்பின் தக்க சமயத்தில் பவுண்டரிகள் மூலம் இந்திய அணி ரன்களை சேர்த்தது.

துரதிஷ்டவசமாக அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்முருதி மந்தானா 58 ரன்களுக்கு ரன்-அவுட்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி காட்ட தொடங்கினார்.

அவரும் மிகச்சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய இறுதியில் 20 ஓவர்கள் பேட்டிங் பிடித்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இலங்கை மகளிர் அணியில் அத்தப்பத்து, அமா காஞ்சனா இருவரும் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 173 எடுத்தால் வெற்றி என இலங்கை மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. இந்திய அணியின் அதிரடியான பந்து வீச்சால் இலங்கை மகளிர் அணி பவர்பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த கவிஷா தில்ஹாரி , அனுஷ்கா சஞ்சீவனி இருவரும் இணைந்து சிறிது நேரம் விளையாடினார்கள். ஆனால் இலங்கை மகளிர் அணிக்கு அது கை கொடுக்கவில்லை. மேலும், இந்திய அணியின் அழுத்தம் கொடுக்கும் பந்து வீச்சு இலங்கை மகளிர் அணிக்கு ரன்கள் எடுக்க நெருக்கடியாக அமைந்தது.

இதனால் 19.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இலங்கை மகளிர் அணி இந்த தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்