தொடரை கைப்பற்றியது இந்திய அணி ..! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி ..!

Published by
அகில் R

ZIMvIND : நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஜிம்பாவே அணி பேட்டிங் களம் இறங்கியது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஜிம்பாவே அணி நல்ல ஒரு தொடக்கத்தையே இந்திய அணிக்கு எதிராக பதிவு செய்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய வீரர்கள் இருவரும் தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகள் விளாசினார்கள்.

சீரான இடைவெளியில் இருவரும் அவர்களது விக்கெட்டைபறிகொடுக்க ஜிம்பாவே அணி கேப்டனான ராசா பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். அவரது நிதான ஆட்டத்தால் ஜிம்பாவே அணி ஒரு டீசன்டான ஸ்கோரை பதிவு செய்தது. ஜிம்பாவே அணியில் அதிகபட்சமாக ராசா 46 ரன்கள் எடுத்திருந்தார்.

அதனால், 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்திய அணி. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் அணியில் இல்லாத ஜெய்ஸ்வால், கடந்த போட்டியில் விளையாடினார். அதன்படி இன்றைய போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், கில்லுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

ஜிம்பாவே அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் ஜெய்ஸ்வால் நாலாப்பக்கமும் போலந்து கட்டினார். இருவரின் விக்கெட்டை எடுக்கவும் ஜிம்பாவே அணி தடுமாறியது. இதனால், 1 விக்கெட்டை கூட இழக்காமல் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்றது.

அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 53 பந்துக்கு 93* ரன்களும், கில் 39 பந்துக்கு 58* ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தற்போது கைப்பற்றி உள்ளது, மேலும் நாளை மாலை 4.30 மணிக்கு கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியானது நடைபெற உள்ளது.

Published by
அகில் R

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

43 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

60 minutes ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago