டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.
நடப்பாண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 43-வது போட்டியில், சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் இன்று பார்படாஸ்ஸில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் வைத்து மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கி விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 8 ரன்களுக்கும், விராட் கோலி 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அதன்பின் ரிஷப் பண்ட்டும் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார், அவருக்கு பின் களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவரது அதிரடியால் தான் இந்திய அணியின் எகிற தொடங்கியது. சிவம் துபே 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஹர்திக் பாண்டியா இணைந்து விளையாடினார்.
இருவரின் அதிரடி கூட்டணியால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 28 பந்துக்கு 53 ரன்கள் எடுத்தார். அதே போல ஆப்கானிஸ்தான் அணியில் ஃபருக்கி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதன்பின் 182 என்ற இமாலய இலக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. எதிர்பார்த்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் அமையாததால் தடுமாறிய ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாததன் காரணமாக விக்கெட்டுகளும் சரிந்து கொண்டே இருந்தது.
மேலும், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களின் மிடில் ஓவர் பந்து வீச்சானது ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது. மேலும், பும்ராவின் அட்டகாசமான 3 விக்கெட்டால் ஆப்கானிஸ்தான் அணி முற்றிலும் பொட்டலம் ஆனது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சூப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…