கலக்கிய சூர்யா ..! சூப்பர் ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்த இந்திய அணி ..!
SLvIND : இந்தியா-இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. அதில் முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது பல்லேகலே நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் ஜெய்வால் இன்று எதிர்பாராத விதமாக 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாம்சன் 2-வது டி20யை போலவே மீண்டும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் 1 ரன்களுக்கும், சூரியகுமார் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.
மறுமுனையில் தொடக்க வீரராக களமிறங்கிய மட்டும் என்று 39 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து இன்னிங்ஸின் கடைசி நேரத்தில் ரியான் பராகும், வாஷிங்டன் சுந்தரும் இணைந்து ஒரு சிறிய கூட்டணி அமைத்தனர்.
இதன் விளைவாக இந்திய அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதன் பிறகு எளிய இலக்கான 138 ரண்களை எடுப்பதற்கு இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சாமர்த்தியமாக இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சமாளித்து விளையாடினர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர், அதன் பின் தொடக்க வீரரான நிசன்ங்கா 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் பெரேரா, குசல் மெண்டிஸுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக இலங்கை அணி வெற்றி முனைப்பை நோக்கி நகர்ந்தது. அதை தொடர்ந்து குசல் மெண்டிஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அசலங்கா, ஹஸரங்கா என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் இலங்கை வீரர்கள் ஆட்டமிழக்க போட்டி சற்று விறுவிறுப்பாக அமைந்தது.
அதன்பின் மறுமுனையில் நிதானமாக விளையாடி கொண்டிருந்த குசல் பெரேராவும் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் போட்டி இறுதி வரை சென்றது.
கடைசி 6 பந்தில் 6 ரன்கள் தேவை இருந்த நிலையில் அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் பந்து வீசினார். அதன் படி முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுடன் 3 பந்தையும் டாட் பாலாக மாற்றினார்.
அடுத்த 3 பந்தில் 5 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை அணி, விறுவிறுப்பாக சென்ற போட்டி ட்ரா ஆனது. இதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், சூரியகுமார் யாதவ், ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது, அதன்படி இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் சூப்பர் ஓவரை வீசினார். அதில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால், இந்திய அணிக்கு 3 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டி இருந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி முதல் பந்திலேயே சூரியகுமார் யாதவ் பந்தை பவுண்டரிக்கு அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகளை டி20 தொடரை 3-0 என இலங்கை அணியை ‘வைட்வாஷ்’ செய்து தொடரை கைப்பற்றியது.
பேட்டிங்கில் மட்டும் கலக்கிய சூரியகுமார் யாதவ் தற்போது, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். மேலும், இந்தியா-இலங்கை அணி மோதும் ஒரு நாள் தொடர் வரும் ஆகஸ்ட்-2ம் தேதி அன்று கொலோம்போவில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.