#U19WC2024 : 296 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி ..!
U19 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய இந்தியா அணி களமிறங்கியது.
#U19WC2024 : சூப்பர் சிக்ஸின் விதிமுறைகள்..!
தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் வெளியேறினார். இதை அடுத்து 2வது விக்கெட்டுக்கு விளையடைய ஆதர்ஷ் சிங் மற்றும் முஷீர் கான் இருவரும் நிலைத்து விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் ஆதர்ஷ் சிங் ஆட்டமிழக்க இந்திய அணியின் கேப்டன் ஆன உதய் சஹாரன் அவருடன் கை கோர்த்து விளையாடினார்.
மறுமுனையில் முஷீர் கான் நிதானமாக விளையாடி, மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 126 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 295 ரன்கள் எடுத்தது.
நியூஸிலாந்து அணி சார்பாக மேசன் கிளார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின் 296 ரன்களை இலக்காக கொண்டு நியூஸிலாந்து அணி களமிறங்கவுள்ளது.