டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் மோதியது.
நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் மிக முக்கியமான போட்டியில் இன்று இந்தியா அணியும், வங்கதேச அணியும் அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று ரன்களை மெதுவாக எடுக்க ஆரம்பித்த தருணத்தில் ரோஹித் சர்மா 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதன்பின் விராட் கோலி 37 ரன்கள், சூரியகுமார் யாதவ் 6 ரன்கள் என தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. அதற்கு பிறகு சிவம துபேவும், ரிஷப் பண்டும் இணைந்து சற்று ரன்களை எடுத்தனர்.
பின், சிவம் துபேவும், ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதில், ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 27 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து வங்கதேச அணி, பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே சற்று நிதானமாக விளையாடி, விக்கெட்டையும் இழந்ததால் மிடில் ஓவர்களில் ரன்ஸ் எடுக்க ஆளில்லாமல் தடுமாறியது.
மேலும், போக போக பந்து குறைவாகவும், ரன்கள் அதிகமாகவும் இருந்ததால் அடிக்க முயற்சித்து விக்கெட்டையும் இழந்து வந்தது வங்கதேச அணி. இதனால், வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதி சுற்றில் ஒரு காலை எடுத்து வைத்துள்ளது.
மேலும், இந்த தோல்வியின் மூலம் வங்கதேச அணி இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…