அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி..!
டி20I: நடைபெற்ற டி20 போட்டியில் இன்று அமெரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 25-வது போட்டியில் இந்தியா அணியும், அமெரிக்கா அணியும் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி அமெரிக்கா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. இதனால், தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அமெரிக்கா அணி பின் மெதுவாக தட்டி தட்டி ரன்களை சேர்க்க தொடங்கியது. இதனால், அமெரிக்கா சரிவை கண்டாலும் படிப்படியாக ஒரு நல்ல ஸ்கோரை நோக்கியே நகர்ந்தது.
அதனை தொடர்ந்து 15 ஓவர்களை கடந்து விளையாடிய அமெரிக்கா அணி மீண்டும் சரிவை காண தொடங்கியது. அதன் பின் மீண்டும் சரிவை சந்தித்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 110 ரன்களை மட்டுமே எடுத்தது. அமெரிக்கா அணியில் அதிகட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்திருந்தார்.
சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் அர்ஷதீப் சிங் 9 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனை அடுத்து இலக்கை எட்டுவதற்கு பேட்டிங் களமிறங்கிய இந்தியா அணி, முதல் ஓவரிலேயே விராட் கோலி (0 ரன்கள்) தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் அவரது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவரும் அமெரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிவம் துபேவும், சூர்யாகுமார் யாதவும் அமெரிக்கா அணியின் பவுலர்கள் பந்து வீச்சை சமாளித்து, களத்தில் நிலைத்து நின்று கடைசி வரை விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இதில் சூரியகுமார் யாதவ் 49 பந்துக்கு 50 ரன்களும், சிவம் துபே 35 பந்துக்கு 31 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்தியா அணி 18. 2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.