வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி.! 352 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து , இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய இந்த ஆட்டத்தில், முதல் நாள் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 57 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 80 ரன்களிலும் அட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து கில் மற்றும் ரகானே அடுத்தடுத்து அவுட் ஆக, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி அதனை பூர்த்திசெய்யும் விதமாக 180 பந்துகளில் தனது 29வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.
அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் அஸ்வின் 56 ரன்களும், இஷான் கிஸான் 25 ரன்களிலும் அவுட் ஆக இறுதியாக 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது.
இந்த வலுவான இலக்கை துரத்தி பிடிக்க களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர் டேகனரைன் சந்தர்பால்க் 33 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பிராத்வைட், கிர்க் மெக்கென்சி ஆகியோர் முறையே 37 மற்றும் 14 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 42 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…