2வது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி.! 352 ரன்கள் பின்னடைவில் வெஸ்ட் இண்டீஸ்.!

INDvWI Test cricket 2nd Day

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி.! 352 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து , இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்  ஆட்டம் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய இந்த ஆட்டத்தில், முதல் நாள் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 57 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 80 ரன்களிலும் அட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து கில் மற்றும் ரகானே அடுத்தடுத்து அவுட் ஆக, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி அதனை பூர்த்திசெய்யும் விதமாக  180 பந்துகளில் தனது 29வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் அஸ்வின் 56 ரன்களும், இஷான் கிஸான் 25 ரன்களிலும் அவுட் ஆக இறுதியாக 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது.

இந்த வலுவான இலக்கை துரத்தி பிடிக்க களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர் டேகனரைன் சந்தர்பால்க் 33 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பிராத்வைட், கிர்க் மெக்கென்சி ஆகியோர் முறையே 37 மற்றும் 14 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 42 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்