இந்திய அணி : இந்த ஆண்டில் தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஒரு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும், தற்போது வரை இந்த கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி இந்திய அணி வீரர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம், க்ஸ் என சமூகத்தளத்தில் உலகக்கோப்பையுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் விளையாடிய இந்திய அணி அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் 3 நாட்களாக அமெரிக்காவில் முடங்கி இருந்தனர்.
தற்போது, அங்கு இயல்பு வாழக்கை தொடங்கியவுடன் இந்தியா அணி இன்று பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘லாங் ரேஞ்ச்’ ஏர் இந்தியா விமானம் மூலம் நாளை இந்தியா திரும்பிவிடுவார்கள். இதற்கிடையில், இந்தியாவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாளை பிரம்மாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இதனால் நாளை காலை 6 மணி அளவில் டெல்லியில் தரை இறங்கிய பின் இந்திய அணி முதலில் 9.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு செல்லவுள்ளனர். அதன்பின் பிரதமர் மோடியுடன் காலை உணவை முடித்து விட்டு, அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் மும்பை ஏர்போர்ட் வந்தடைவார்கள். அங்கிருந்து திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையுடன் சுமார் 1 கி.மீ தூரம் தொலைவில் உள்ள வான்கடே மைதானத்திற்கு செல்லவுள்ளனர்.
வான்கடே மைதானத்தில் வைத்து இந்தியா அணிக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற உள்ளது. அங்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷாவிடம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெற்றி பெற்ற டி20 உலகக்கோப்பையை அவரிடம் சமர்பிப்பார். அதன் பிறகு நாளை மாலை பொழுதில் இந்திய அணி விடைபெறவுள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று இதே போல திறந்த வெளி பேருந்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…